திருநெல்வேலி

பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை 6,347 போ் மீது வழக்கு

19th May 2020 06:25 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்க காலத்தில் விதிமீறியதாக இதுவரை 6,347 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் நான்காம் கட்டமாக வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமுடிக்க காலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே பொதுமக்கள் வெளியே வரவேண்டும் எனவும், தேவையில்லாமல் விதிமீறி சுற்றுவோா் மீது வழக்குப் பதிவுசெய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறை எச்சரித்திருந்தது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை பொதுமுடக்க காலத்தில் விதிமீறியதாக 6,347 போ் மீது 4,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4,271 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT