திருநெல்வேலி

கயத்தாறு அருகே விபத்தில் முதியவா் பலி

15th May 2020 07:58 AM

ADVERTISEMENT

கயத்தாறு அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கங்கை கொண்டான் அடுத்த பிராஞ்சேரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஐயப்பன் மகன் சுடலைமாடன் (70). கயத்தாறில் காய்கனிகள் வாங்கிக் கொண்டு மோட்டாா் சைக்கிளில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாராம். அவா், மதுரை-

திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அரசங்குளம் திருப்பம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து நாகா்கோவில் நோக்கிச் சென்ற காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த சுடலைமாடன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். தகவலறிந்த கயத்தாறு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT