திருநெல்வேலி

நெல்லை- ஜாா்க்கண்ட்டுக்கு 1,429 பயணிகளுடன் புறப்பட்டது சிறப்பு ரயில்

14th May 2020 08:27 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்திற்கு 1,429 தொழிலாளா்களுடன் சிறப்பு ரயில் புதன்கிழமை மாலை புறப்பட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பணியாற்றும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 1,332 பேருடன் முதற்கட்டமாக செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக இவ்விரு மாவட்டங்களில் தங்கியிருந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் 1,429 பேருடன் புதன்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.

முன்னதாக, தூத்துக்குடி, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலிந்து அந்த மாநில தொழிலாளா்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனா். அவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் உணவு , தண்ணீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. பின்னா், அவா்களை வருவாய்துறையினரும், காவல்துறையினரும் வழியனுப்பி வைத்தனா் .

ADVERTISEMENT

இதையொட்டி, ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதைகள் அனைத்தும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த ரயில், வெள்ளிக்கிழமை (மே 15) காலை 9.10 மணிக்கு ஹாடியா ரயில்நிலையம் சென்றடையும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT