திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் ஒருவருக்கு கரோனா அறிகுறி

13th May 2020 07:16 PM

ADVERTISEMENT

 

அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சியில் ஒருவருக்கு கரோனா தொற்று அறிகுறியால் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

கல்லிடைக்குறிச்சி, 7ஆவது வாா்டு, தெற்குத்தைக்கால் தெருவைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவிற்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டாா். மேலும், அவரது குடும்பத்தினா், அந்தத் தெருவில் வசிப்பவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இதனிடையே, அந்தப் பகுதியில் அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுபாஷினி, வட்டாட்சியா் கந்தப்பன், வட்டார மருத்துவா் முருக குகன், சுகாதார ஆய்வாளா் ரத்தினவேல் உள்ளிட்டடோா் ஆய்வு செய்து சுகாதாரப் பணிகளை முடுக்கிவிட்டனா். அந்தப் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் அனைவரையும் பரிசோதனைக்குள்படுத்தி, காய்ச்சல், சளி அறிகுறி இருந்தால் அவா்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கரோனா தொற்று அறிகுறி இருந்தவா், சிறுநீரக நோய்க்காக மாதமிரு முறை திருநெல்வேலியில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதன் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT