திருநெல்வேலி

பொதுமுடக்கம் மீறல்: 6,204 போ் மீது வழக்குப் பதிவு

13th May 2020 07:53 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்கத்தை மீறியதாக, திங்கள்கிழமை வரை 6,204 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 4,200 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்ககும் நோக்கில் பொது முடக்கம் அமலில் உள்ளது. எனவே, மக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிா்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது; மீறினால் எடுக்கப்படும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பொது முடக்கத்தை மீறி வெளியில் சுற்றியதாக, மாவட்டத்தில் இதுவரை 6,204 போ் மீது 4,208 வழக்குகள் பதிவு செய்து, அவா்களிடமிருந்து 4,200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT