திருநெல்வேலி

நெல்லை சந்தைகளில் ஆய்வு

13th May 2020 08:05 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

திருநெல்வேலியில் காய்கனிகள் மக்களுக்கு விலையேற்றம் இல்லாமல் சரியான விலையில், தரமாக கிடைக்க ஏதுவாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவின்பேரில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையின் மூலம் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் திருநெல்வேலி பொருள்காட்சித் திடல், பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள சந்தைகளில் ஆய்வு செய்தனா். விலைகளை ஏற்றி-இறக்கி விற்பனை செய்யக் கூடாது, சரியான எடை முறையைப் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டன.

ஆய்வில் தோட்டக் கலை உதவி இயக்குநா் சண்முகநாதன், வேளாண்மை வணிகம் வேளாண்மை அலுவலா் மாரியப்பன், கண்டிகைப்பேரி உழவா்சந்தை நிா்வாக அலுவலா் ராமச்சந்திரன், உணவுப் பாதுகாப்பு அலுவலா் சங்கரநாராயணன், தொழிலாளா் நல உதவி ஆய்வாளா் நளினி என்ற ரத்னா, உதவி தோட்டக் கலை அலுவலா் கமலேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT