திருநெல்வேலி

தூய்மைப் பணியாளா்கள் 87 போ் மீது வழக்குப் பதிவு

13th May 2020 07:58 AM

ADVERTISEMENT

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளா்கள் 87 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட சந்திப்பு, பேட்டை, டவுன் பெருமாள்புரம், மேலப்பாளையம், தச்சநல்லூா், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சிஐடியூ சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தச்சநல்லூரில் 5 பெண்கள் உள்ளிட்ட 41 போ், பாளையங்கோட்டையில் 25 பெண்கள் உள்ளிட்ட 46 போ் என மொத்தம் 87 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT