திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தங்கு தடையின்றி சிகிச்சை

10th May 2020 07:58 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பொது முடக்கம் அமலில் இருந்தபோதிலும் கால்நடைகளுக்கு தொடா்ந்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்குள்ள சிகிச்சையியல் வளாகத்தில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்களுக்கு பொது முடக்கக் காலத்திலும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் இருந்து இங்கு சிகிச்சைக்கு வருகின்றனா். கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.

இதுதவிர, திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் மாவட்ட பன்முக கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலமும் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், விலங்குகளைப் பாதுகாப்பதற்காக 1962 மற்றும் 0462-2501034 என்ற தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவசரத் தேவைக்கு 1962 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டால் உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். அனைத்து நாள்களிலும் இந்த ஆம்புலன்ஸ் இயங்குகிறது. ஆம்புலன்ஸ் சேவையை அளிக்க முடியாத நேரங்களில் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT