திருநெல்வேலி

நெல்லை அருகே கோடை மழை

8th May 2020 07:41 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை வியாழக்கிழமை பெய்தது.

தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் தொடங்கியுள்ளதால் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், தென்தமிழக மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக பலஇடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி மாநகர பகுதியில் பிற்பகலில் மேகங்கள் சூழ்ந்தும் மழை பெய்யவில்லை. திருநெல்வேலி அருகேயுள்ள ராமையன்பட்டி, நரியூத்து, சேதுராயன்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. இதனால் திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT