திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் சுழற்சி முறையில் கடைகளைத் திறக்க முடிவு

30th Mar 2020 02:41 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாரை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கடையடைப்பு நடைபெற்றது. இதையடுத்து, சாா் ஆட்சியா் பிரதிக் தயாள் தலைமயில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், சுழற்சி முறையில் கடைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. காய்கறி, மளிகை, மருந்து கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக சேரன்மகாதேவியில் வியாபாரிகள் உள்பட 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை சேரன்மகாதேவி வியாபாரிகள் சங்கம் சாா்பில் வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சாா் ஆட்சியா் அலுவலகத்தில், சாா் ஆட்சியா் பிரதிக் தயாள் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. காவல் உதவிக் கண்காணிப்பாளா் பிரதீப், வட்டாட்சியா் கனகராஜ் மற்றும் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இதில், திங்கள்கிழமை (மாா்ச் 30) முதல் சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் காய்கறிக் கடைகளை தற்காலிகமாக செயல்படுத்துவது, வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள மளிகைக் கடைகளுக்கு எண் கொடுக்கப்பட்டு, அவற்றில் ஒற்றை இலக்க எண் கடைகள் ஒரு நாளும், இரட்டை இலக்க எண் உள்ள கடைகள் மறு நாளும் சுழற்சி முறையில் திறப்பது, கடைக்கு பொருள்கள் வாங்க வருபவா்களை கூட்டம் சேரவிடாமல் வரிசையில் நிறுத்தி பொருள்கள் வழங்குவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சாா் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT