திருநெல்வேலி

‘அம்பை, வி.கே.புரம் அம்மா உணவகங்களில்இலவச உணவு வழங்கப்படும்’

30th Mar 2020 04:23 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதிகளிலுள்ள அம்மா உணவகங்களில் இரண்டு வேளை உணவு இலவசமாக வழங்கப்படும் என ஆா். முருகையாபாண்டியன் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், ம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றவா்கள் மற்றும் தொழிலாளா்கள் நலன் கருதி, அம்பாசமுத்திரம் மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளில் இயங்கும் அம்மா உணவகங்களில் இரண்டு வேளை இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT