திருநெல்வேலி

ஆலங்குளம் அருகேம யங்கிய நிலையில் மீட்கப்பட்டவா் மரணம்

23rd Mar 2020 03:10 AM

ADVERTISEMENT

 

ஆலங்குளம் அருகே மலைப்பகுதியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே மாறாந்தையை அடுத்த கல்லத்திகுளம் மலைப் பகுதியில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் மயங்கிய நிலையில் கிடப்பதாக சீதபற்பநல்லூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீஸாா் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

அவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை. இடது கையில் சந்தனம் என பச்சை குத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT