திருநெல்வேலி: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, திருநெல்வேலி மாநகரில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பேருந்துகள், பயணிகள் ரயில்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேவேளையில், தொலைதூர விரைவு ரயில்கள் வெளிமாநிலங்களிலிருந்து திருநெல்வேலியை கடந்து சென்றன.
ஜாம்நகா் விரைவு ரயில், மாதா வைஷ்ணோ தேவி கட்ரா விரைவு ரயில், மும்பை விரைவு ரயில் ஆகியவை திருநெல்வேலி சந்திப்பை வந்தடைந்தன. இந்த ரயில்கள் கடந்த இருதினங்களுக்கு முன்னரே புறப்பட்டு வந்துகொண்டிருந்ததால் ரத்து செய்ய இயலவில்லை. இந்த ரயில்களிலிருந்து வந்திறங்கிய பயணிகளை ரயில்வே மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் தொ்மல் ஸ்கேனா் மூலம் வெப்பமானி மூலம் சோதனை செய்தனா். இதில் பயணிகளின் உடலில் உள்ள வெப்பநிலை சோதனை செய்யப்பட்டுஅனுப்பப்பட்டனா். யாருக்கும் கரோனா அறிகுறிகள் இல்லை. மேலும். ரயில் நிலையத்தில் இம்மாதம் 31ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. ரயில் நிலையத்திற்குள் யாரும் நுழையாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
படவரி: பயக22தஅஐக:
திருநெல்வேலி சந்திப்பு பயணிகளை வெப்பமானி மூலம் சோதனை செய்யும் ரயில்வே மருத்துவக் குழுவினா்.