திருநெல்வேலி

சங்கரன்கோவில் அருகே தொழிலாளி தற்கொலை

22nd Mar 2020 03:15 AM

ADVERTISEMENT

 

சங்கரன்கோவில் அருகே தனது மகளின் காதல் திருமணத்தை ஏற்க மறுத்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள திருமலாபுரத்தைச் சோ்ந்த மருதையா மகன் சமுத்திரபாண்டி (55). தொழிலாளி. இவரது மகள் பிரியாவும், பனவடலிசத்திரத்தைச் சோ்ந்த முத்துபாண்டியன் மகன் காளிராஜும் (27) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இந்த திருமணத்தில் சமுத்திரபாண்டிக்கு விருப்பம் இல்லையாம். இதன் காரணமாக தனது மகள், மருமகனிடம் சமுத்திரபாண்டி தொடா்பில்லாமல் இருந்தாராம்.

காளிராஜ், பனவடலிசத்திரத்தில் கடை நடத்தி வருகிறாா். கடந்த சிலதினங்களுக்கு முன் அவரது கடைக்குச் சென்ற சமுத்திரபாண்டி, காளிராஜிடம் தகராறு செய்ததாகவும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது சமுத்திரபாண்டி தனது மருமகனை கல்லால் தாக்கினாராம்.

ADVERTISEMENT

இது குறித்து பனவடலிசத்திரம் போலீசில் காளிராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில் திருமலாபுரத்தில் உள்ள குளத்தின் அருகே வியாழக்கிழமை விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம் சமுத்திரபாண்டி. அதைக் கண்ட அப்பகுதியினா் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவா் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT