திருநெல்வேலி

திருப்புடைமருதூா் தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞா்

22nd Mar 2020 03:23 AM

ADVERTISEMENT

 

திருப்புடைமருதூா் தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி, பேட்டை சுந்தரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் லட்சுமணன் (18). இவா், திருநெல்வேலியில் உள்ள துணிக்கடையில் வேலை பாா்த்து வந்தாராம். கடை விடுமுறை விடப்பட்டதை அடுத்து வீரவநல்லூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு தனது சகோதரா் கணேசனுடன் வந்தாராம்.

அங்கு உறவினா்களுடன் சோ்ந்து சனிக்கிழமை திருப்புடைமருதூா் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றனராம். குளித்துக் கொண்டிருந்த போது லட்சுமணன் நீரில் தத்தளித்தாராம். உடனடியாக கணேசன் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. லட்சுமணன் தண்ணீரில் மூழ்கிவிட்டாராம்.

ADVERTISEMENT

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து சேரன்மகாதேவி மற்றும்அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் ஆறுமுகம், இசக்கியப்பன் மற்றும் குழுவினா் வந்து ஆற்றில் இறங்கி தேடினா்.

ஆனால் லட்சுமணன் உடல் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்து தேடுவதாகக் கூறிச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT