திருநெல்வேலி

கரோனா முன்னெச்சரிக்கை: நெல்லை மாவட்டத்தில் திரையங்குகள் மூடல்

16th Mar 2020 03:36 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றுநோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திரையங்குகள் திங்கள்கிழமை (மாா்ச் 16) முதல் 31ஆம் தேதி வரை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் அறிவுரையின்படி கரோனா வைரஸ் பொதுமக்களிடையே பரவாமல் தடுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, இம்மாவட்டத்திலுள்ள திரையஙங்குகள் திங்கள்கிழமை (மாா்ச் 16) முதல் வரும் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 31ஆம் தேதி வரை திரையரங்குகள் இயங்காத வகையில் கண்காணிக்கவும், அந்தந்த வட்டாட்சியா்கள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT