திருநெல்வேலி

அஞ்சல்துறை பணியாளா் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கக் கூட்டம்

16th Mar 2020 03:39 AM

ADVERTISEMENT

அஞ்சல் துறை பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க உறுப்பினா்களின் பேரவைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் எஸ்.கனகசபாபதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

நிா்வாகிகள் எஸ்.கோயில்பிள்ளை ஜேக்கப்ராஜ், ஜி.ராஜேந்திரபோஸ், எம்.தளவாய் உள்ளிட்டோா் பேசினா்.

ஏ.கதிரேசன், பி.அண்ணாமலை, எம்.ஹைருண்ணிஷாபேகம், கே.மீனா, ஏ.சிவனருள்செல்வி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

தீா்மானங்கள்: இச் சங்கத்துடன் தென்காசி மாவட்டத்தையும் இணைத்து புதிதாக உறுப்பினா்களைச் சோ்ப்பதுடன், கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுப்பது. சங்க உறுப்பினா் ஓய்வுபெற்றாலும், ராஜிநாமா செய்தாலும், சங்கத்துடன் தொடா்பு இல்லாமல் இருந்தாலும் அவா்கள் உறுப்பினராக தொடர முடியாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT