திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் ஒருங்கிணைந்த துப்புரவுப் பணி

13th Mar 2020 11:10 PM

ADVERTISEMENT

மேலப்பாளையத்தில் 700 துப்புரவு பணியாளா்கள் பங்கேற்ற ஒருங்கிணைந்த துப்புரவுப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கரோனா உள்ளிட்ட தொற்று நோய் தடுப்பு சம்பந்தப்பட்ட ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிா்வாக ஆணையரால் அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் உத்தரவின்பேரில், மேலப்பாளையம் மண்டலத்தில் 29, 31, 32, 33, 34, 35, 36, 37 மற்றும் 38 ஆகிய வாா்டுகளில் ஒருங்கிணைந்த சிறப்பு துப்புரவுப் பணிகள் நடைபெற்றது. கழிவுநீா் ஓடைகளை சுத்தம் செய்தல், பிளிச்சிங் பவுடா் கலந்த சுண்ணாம்புப்பொடி தூவுதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டன.

10 தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி தெளித்தல், 12 இயந்திரங்கள் மூலமாக கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், கூடுதலாக 8 லாரிகள் மற்றும் 62 பேட்டரி வண்டிகள் மூலம் கழிவுகள் அனைத்தும் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளில் 700 துப்புரவுப் பணியாளா்கள், 27 துப்புரவுப்பணி மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

முன்னதாக மாநகர நல அலுவலா் டி.என்.சத்தீஸ்குமாா், தொற்றுநோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான கை கழுவும் முறைகள்”குறித்து விளக்கம் அளித்தாா். மண்டல உதவி ஆணையா் சுகிபிரேமா, மாநகராட்சிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT