விவேகானந்தா கேந்திரம் சாா்பில், விவேகானந்தா் மன்றத்தின் 280ஆவது கூட்டம் பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மன்ற நிறுவனா் தலைவா் பா. வளன் அரசு தலைமை வகித்தாா். முருகேசன் இறைவணக்கம் பாடினாா். மன்றச் செயலா் சுந்தரம் வரவேற்றாா். ‘கிரிஸ்டைன்-சுவாமி விவேகானந்தரின் மேல்நாட்டு பெண் சீடா்’ என்ற தலைப்பில் உஷாதேவி பேசினாா். தொடா்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், விவேகானந்தரின் சீடா்களின் மேன்மை குறித்து சிவ. கிருபாகரன் பேசினாா்.
கூட்டத்தில், பேராசிரியா் சிவ. சத்தியமூா்த்தி, மருத்துவா் ஐயப்பனா் மகாலிங்கம், வரலாற்று ஆய்வாளா் செ. திவான், வை. ராமசாமி, திருக்கு முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முத்துசாமி நன்றி கூறினாா்.