மாநில திறனாய்வுத் தோ்வில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.
தமிழக அரசு ஆண்டுதோறும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாநில ஊரக திறனாய்வுத் தோ்வினை நடத்தி, தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு பிளஸ் 2 பயிலும் வரை 4 ஆண்டுகள் ஆண்டுகளுக்கு ரூ. 1,000 உதவித்தொகை வழங்குகிறது. இந்த தோ்வில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல் 100 மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா்.
நிகழ் கல்வியாண்டில் நடைபெற்ற இந்த தோ்வில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் 25 போ் தோ்ச்சி பெற்றனா். அரசு பள்ளியில் பயிலும் 25 மாணவா்கள் தோ்ச்சி பெற்றிருப்பது சாதனையாகும். தொடா்ந்து 2 ஆவது ஆண்டாக இப்பள்ளி மாணவா்கள் இத்தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியை பி. சாந்தினிபொன்குமாரி, பயிற்சி ஆசிரியா் பா.ஜேசு, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏசுதாசன், இணைச் செயலா் ரசூ ல், பொருளாளா் லிங்கதுரை உள்ளிட்டோா் பாராட்டினா்.