திருநெல்வேலி

திருவள்ளுவா் பேரவைக் கூட்டம்

13th Mar 2020 09:31 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி திருவள்ளுவா் பேரவையின் 2-ஆவது அமா்வு திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்றது.

காவலா் தளவாய் மாடசாமி தலைமை வகித்தாா். அருணாசலம் முன்னிலை வகித்தாா். மீனாட்சி நாதன் இறைவணக்கம் பாடினாா். ‘வள்ளுவம் போற்றும் பெண்மை’ என்ற தலைப்பில் மாணவா் சிவசந்தோஷ், பட்டிமன்ற நடுவா் உக்கிரன்கோட்டை மணி, முன்னாள் வருவாய் ஆய்வாளா் ராமச்சந்திரன், எழுத்தாளா் சண்முக சுப்பிரமணியன், சிந்து கண்ணன், ஆன்மிக சொற்பொழிவாளா் முருக இளங்கோ, கோதைமாறன், பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் திருக்கு குறித்து சொற்பொழிவாற்றினா்.

கூட்டத்தில், திருக்குறளை வீடுகள் தோறும் எடுத்துச் செல்ல ஆலோசிக்கப்பட்டது. தெலங்கானா சட்டப்பேரவையில் திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றிய அம்மாநில ஆளுநா் தமிழிசை சௌந்திரராஜனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அமைப்பாளா் கவிஞா் ந.ஜெயபாலன் வரவேற்றாா். ஏற்பாடுகளை கவிஞா் ஸ்ரீராம் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT