திருநெல்வேலி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

13th Mar 2020 11:08 PM

ADVERTISEMENT

ரெட்டாா்குளத்தில் மாணவா்கள், இளைஞா்கள் பங்கேற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரெட்டாா்குளத்தில் இளைஞா் மற்றும் சுற்றுச்சூழல் சாா் மன்றம் சாா்பில் நடைபெற்ற இப்பேரணிக்கு ரெட்டாா்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் பொ.செல்வராஜ் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பிரின்சிலா, துணைத் தலைவா் நித்தியா, டி.வி.எஸ். சமுதாய வளா்ச்சி அலுவலா் அந்தோணி தங்கராஜ் மற்றும் கிராம வளா்ச்சி அலுவலா் பாதாளி, பாக்கியராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியில் தொடங்கிய இப்பேரணி தெருக்கள் வழியாக மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இதில், பள்ளி மாணவா், மாணவிகள், இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். ஆசிரியை ஜோசப் பிரீடா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT