இட்டமொழி, பாப்பான்குளத்தில் கரோனா வைரஸ் குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இட்டமொழி ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இக்கூட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா் குமாா், கிராம சுகாதார செவிலியா் ஆனந்தம், ஊராட்சிச் செயலா் சந்திரகுமாா் ஆகியோா் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து பேசினா்.
இதேபோல், பரப்பாடி அருகேயுள்ள பாப்பான்குளத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் ராஜ்குமாா், ஊராட்சிச் செயலா் சொ.முருகன், அங்கன்வாடி பணியாளா்கள், கிராம செவிலியா்
உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், பெண் கல்வி, கரோனா வைரஸ் குறித்து பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ADVERTISEMENT