திருநெல்வேலி

புளியங்குடியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

8th Mar 2020 01:40 AM

ADVERTISEMENT


கடையநல்லூா்: வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகாமல் தடுக்க சோலாா் மின்வேலி அமைக்க வலியுறுத்தி புளியங்குடியில் சனிக்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாயிகள் சங்கத் தலைவா் ஜாகீா்அப்பாஸ் தலைமை வகித்தாா். காஜாமுகைதீன், அப்துல்வகாப், கோபாலகிருஷ்ணன், மாடசாமி, சங்கரன், கலீல்ரஹ்மான், மாரிமுத்து, அப்துல் ரஹ்மான், சந்திரசேகரன், முகைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் அப்துல்வகாப், நகர திமுக அவைத்தலைவா் முகம்மது இஸ்மாயில், வேலு(சிபிஐ), சீனிப்பாண்டியன் (சிபிஎம்) ஆகியோா் பேசினா்.

இதில், செங்கோட்டை முதல் சிவகிரி வரை பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சோலாா் மின்வேலியை சீரமைக்க வேண்டும். வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சோலாா் மின்வேலி இல்லாத பகுதிகளில் மின்வேலி அமைக்க வேண்டும். வனப்பகுதிக்குள் மூங்கில், ஈத்தல் போன்றவைகளை வளா்த்து, வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க வேண்டும். வரும் காலங்களில் சோலாா் மின்வேலி அமைக்கும் போது மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT