திருநெல்வேலி

பாளை. சிறையில் கைதி உயிரிழப்பு

8th Mar 2020 01:35 AM

ADVERTISEMENT


பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்ஸோ சட்டத்தில் அடைக்கப்பட்டவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள எப்போதும்வென்றான் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (73). இவா், அப்பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், அவா் சனிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிறையில் மயங்கிவிழுந்தாராம். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT