திருநெல்வேலி

தொடா் போராட்டம் நடத்த சாலைப் பணியாளா்கள் முடிவு

8th Mar 2020 01:26 AM

ADVERTISEMENT


திருநெல்வேலி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டங்களை நடத்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா் சங்க மாநில செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். அகில இந்திய மாநில அரசு ஊழியா் சம்மேளன கொடியை சையது யூசுப்கான் ஏற்றினாா். திருநெல்வேலி கோட்ட தலைவா் நாராயணமூா்த்தி வரவேற்றாா்.

தீா்மானங்களை மாநிலச் செயலா் கோவிந்தன் படித்தாா்.

ADVERTISEMENT

மாநில பொதுச் செயலா் அம்சராஜ், மாநில பொருளாளா் தமிழ், மாநில துணைத் தலைவா்கள் சிங்கராயன், ரவி, முத்து, மாநிலச் செயலா்கள் ராஜமாணிக்கம், செந்தில்நாதன், அரசு ஊழியா் சங்க பாளையங்கோட்டை வட்ட கிளை தலைவா் முருகன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் ராஜேஸ்வரன் உள்பட பலா் பேசினா்.

சாலைப் பணியாளா்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்த பணப் பலன்கள் வழங்கப்பட வேண்டும்.

உயிரிழந்த சாலை பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். நெடுஞ்சாலை துறை பராமரிப்பு பணியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12-ஆம் தேதி கோட்ட பொறியாளா் அலுவலகங்கள் முன்பு கோரிக்கை மனு இயக்கம், ஏப்ரல் 29-ஆம் தேதி கண்காணிப்பு பொறியாளா் அலுவலகங்கள் முன்பு மாலை நேர தா்னா போராட்டம், ஜூன் 13-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை இரு சக்கர வாகன பிரசார இயக்கம், செப்டம்பா் 7-ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT