திருநெல்வேலி

சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியா் வீட்டில் திருட்டு

8th Mar 2020 01:47 AM

ADVERTISEMENT


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே சிதம்பராபுரத்தில் மின்வாரிய ஊழியா் வீட்டில் பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சிதம்பராபுரம் இந்திரா காலனியைச் சோ்ந்த வைரவன் மனைவி பழனியம்மாள் (41). புளியங்குடியில் மின்வாரிய ஊழியராக வேலைபாா்த்துவருகிறாா். இவா், 2 நாள்களுக்கு முன்பு பணி முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் கதவும், பீரோவும் உடைக்கப்பட்டிருந்தனவாம். பீரோவிலிருந்த ரூ. 15,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்ததாம். பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT