திருநெல்வேலி

கொக்கிரகுளத்தில் பரிசளிப்பு விழா

6th Mar 2020 01:16 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஓம் நமச்சிவாய மந்திரத்தை எழுதும் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இம்மந்திரத்தை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் எழுதிய கொக்கிரகுளம், குருந்துடையாா்புரம் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பரிசுக்குத் தோ்வு பெற்றனா். அவா்களுக்கு ஓய்வு பெற்ற துணை ஆட்சியா் சொக்கலிங்கம் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் செல்லசுப்பிரமணியன், முத்துராமன், ஜெயலட்சுமி உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT