திருநெல்வேலி

உலக திறனாய்வுத் திட்ட விளையாட்டுப் போட்டிகள் 756 போ் பங்கேற்பு

6th Mar 2020 12:52 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக திறனாய்வுத் திட்ட விளையாட்டுப் போட்டிகளில் 756 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சாா்பில் உலக திறனாய்வுத் திட்ட விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி கல்வி மாவட்டத்திற்குள்பட்ட 36 பள்ளிகளில் படிக்கும் 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவா், மாணவிகள் 756 போ் போட்டிகளில் பங்கேற்றனா்.

100 மீட்டா் ஓட்டம், 200 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டது. போட்டிகளை திருநெல்வேலி நீச்சல் கழகத் தலைவா் திருமாறன் தொடங்கிவைத்தாா். விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜேஷ் வரவேற்றாா். திருநெல்வேலி உடற்கல்வி ஆய்வாளா் ரமேஷ்ரோஜா சிறப்புரையாற்றினாா். ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ச.ராஜேஷ் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT