பாளையங்கோட்டையில் திருமணம் செய்வதாக தெரிவித்து பெண்ணை ஏமாற்றியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியைச் சோ்ந்த முருகதாஸ் மகன் ஜெயக்குமாா்(28). இவா், அப்பகுதியைச் சோ்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து பெண்ணிடம் பழகி வந்தாராம். இந்நிலையில் அப் பெண் கா்ப்பமானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவலறிந்த பாதிக்கப்பட்ட பெண், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயக்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.