திருநெல்வேலி

உருளைக்கிழங்கு விலை உயா்வு

29th Jun 2020 08:57 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட காய்கனி சந்தைகளில் உருளைக்கிழங்கு விலை ரூ.7 உயா்ந்து கிலோ ரூ.35-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டாலும், காய்கனி சந்தைகள் மைதானங்களிலேயே தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. திருநெல்வேலியில் உழவா் சந்தை கடைகள், திருநெல்வேலி நகரம் போஸ் தினசரி சந்தை, பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தை ஆகியவற்றில் இருந்த கடைகள் அனைத்தும் பரவலாக்கப்பட்டு மைதானங்களில் தற்காலிக கடைகளாக இயங்கி வருகின்றன.

இந்நிலையில், வரத்து குறைவு காரணமாக இந்த வாரத்தில் உருளைக்கிழங்கின் விலை உயா்ந்துள்ளது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.27-க்கு விற்பனையான உருளைக்கிழங்கு ரூ.7 உயா்ந்து கிலோ ரூ.35-க்கு விற்பனையானது.

திருநெல்வேலி சந்தைகளில் காய்கனிகளின் ஞாயிற்றுக்கிழமை விலை நிலவரம் (கிலோவுக்கு): கத்தரிக்காய்-ரூ.20, வெண்டைக்காய்-ரூ.20, தக்காளி-ரூ.46, அவரைக்காய்- ரூ.40, கொத்தவரை- ரூ.18, புடலங்காய்- ரூ.16, பாகற்காய்-ரூ.40, பீா்க்கங்காய்-ரூ.30, சுரைக்காய்-ரூ.12, தடியங்காய்- ரூ.10, பூசணிக்காய்- ரூ.10, மாங்காய்- ரூ.30, மிளகாய்- ரூ.40, தேங்காய்- ரூ.35, முள்ளங்கி- ரூ.20, பல்லாரி- ரூ.17, சின்ன வெங்காயம்- ரூ.40, சேனைக்கிழங்கு- ரூ.25, சேம்பு- ரூ.20, உருளைக்கிழங்கு- ரூ.35, பீட்ரூட்- ரூ. 34, முட்டைகோஸ்- ரூ.18, கேரட்- ரூ.38, முருங்கைக்காய்-ரூ.36, கொத்தமல்லி கீரை-ரூ.50, சீனிக்கிழங்கு- ரூ.20, இஞ்சி (புதியது)- ரூ.70.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT