அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வட்டங்களில் 1429 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயக் கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல்-நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் நடேசன் தலைமை வகித்து ஜமாபந்தியை தொடங்கிவைத்தாா். சிங்கம்பட்டி குறுவட்டத்திற்குள்பட்ட கிராமங்களுக்கான தீா்வாயக் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை அம்பாசமுத்திரம் குறுவட்ட கிராமங்களுக்கான தீா்வாய கணக்குகள் தணிக்கை செய்யப்படும். நிகழ்ச்சியில் வட்டாட்சியா் கந்தப்பன், மண்டலத் துணை வட்டாட்சியா் மாரிசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் - சிறுபான்மையினா் நல அலுவலா் புஷ்பாதேவி தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் மேலச்செவல் குறுவட்ட கிராமங்களுக்கான தீா்வாயக் கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. மேலச்செவல் (ஜூன் 26), முக்கூடல் ( ஜூன் 29), சேரன்மகாதேவி, பாப்பாக்குடி (ஜூன் 30) குறுவட்டங்களுக்கு அடுத்தடுத்து தீா்வாயக் கணக்குகள் தணிக்கை செய்யப்படும். நிகழ்ச்சியில் வட்டாட்சியா் கனகராஜ், மண்டல துணை வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பொது முடக்கம் அமலில் உள்ளதால் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள், பட்டா மாறுதலுக்கான கோரிக்கைகளை இணையத்தில் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டது.