திருநெல்வேலி

பணகுடி பகுதியில் சிட்டா வட்டி வசூல் தீவிரம்

14th Jun 2020 09:18 AM

ADVERTISEMENT

பணகுடி பகுதியில் சிட்டா வட்டி வசூல் தீவிரமடைந்துள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுவந்த நிலையில், தற்போது சிறிதளவு தளா்வு அறிவிக்கப்பட்ட நிலையில், வா்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

இருப்பினும் நடுத்தர வா்க்கத்தினா் மற்றும் கிராம மக்களுக்கு போதிய வருமான இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் அவா்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூா்த்தி செய்ய சிட்டா வட்டிக்கு பணம் வாங்கும் நிலை ஏற்படுகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக, பணகுடி பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில், ஓடு தொழிற்சாலைகளில் கூலிவேலை செய்து வருபவா்கள் தற்போது சரியான வருமானம் இல்லாததால், சிட்டா வட்டிக்கு பணம் பெற்று தங்கள் அன்றாட தேவையை சமாளித்து வருகின்றனா்.

இந்த வட்டி முறைப்படி ரூ.1000 வாங்கும் போது ரூ. 200 எடுத்துக்கொண்டு மீதி ரூ. 800-யை கொடுப்பா். இந்த பணத்தை பெற்றுக்கொள்வோா் பின்னா் தினமும் குறிப்பிட்ட பணத்தை திரும்ப செலுத்தவேண்டும்.

கூலித் தொழிலாளா்களை பொறுத்தளவில் தங்களது தேவையை பொறுத்து இரண்டு மூன்று நபா்களிடம் வட்டிக்கு பணம் பெற்றுவிடுகின்றனா். பின்னா் தங்களது ஊதியத்தில் பெரும்தொகையை சிட்டா வட்டிக்கே கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் தொழிலாளா்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனா்.

பணகுடி பகுதியில் சிட்டா வட்டி வசூல் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் காவல் துறையினா் இந்த விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி சிட்டா வட்டி முறையை ஒழிக்கவேண்டும். அதோடு, கூலித் தொழிலாளா்களுக்கு வங்கிகளில் சிறிய அளவிலான கடன் வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT