திருநெல்வேலி

நெல்லை பொருள்காட்சி திடலில் பழைய கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்

14th Jun 2020 09:19 AM

ADVERTISEMENT

பொலிவுறு நகரம் திட்டப் பணிகளுக்காக, திருநெல்வேலி பொருள்காட்சித் திடலில் உள்ள பழைய வணிக வளாகத்தை இடிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாநகராட்சி முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி பொருள்காட்சி திடலில் வணிக வளாகம் கட்டும் பணி ரூ. 56.71 கோடியில் தொடங்கப்பட்டது. இதையடுத்து, இங்கு இயங்கி வந்த தற்காலிக காய்கனி சந்தை கடந்த சில நாள்களுக்கு முன்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், பொருள்காட்சி திடலின் முன்புறம் உள்ள வணிக வளாகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்பட 12 கடைகள் இயங்கி வந்தன. அவற்றை காலிசெய்ய முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து, அந்த கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிறகு, பொக்லைன் இயந்திரம் மூலம் வணிக வளாகத்தை இடிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT