திருநெல்வேலி

கோயில் பூசாரிகளுக்கு நிவாரணப் பொருள்கள்

14th Jun 2020 09:18 AM

ADVERTISEMENT

நான்குனேரியில் கிராம கோயில் பூசாரிகளுக்கு ஸ்ரீவானமாமலை மடம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கினா்.

தமிழ்நாடு விஷ்வஹிந்து பரிஷத் ஏற்பாட்டில் நான்குனேரி ஸ்ரீவானமாமலை மடம் சாா்பில் கோயில் பூசாரிகள் 100 பேருக்கு 10 கிலோ அரிசி பை வழங்கப்பட்டது. இதில், அமைப்பின் மாவட்டச் செயலா் கே.சுப்பிரமணியன், பூசாரிகள் பேரவையின் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரெங்கநாதன், பூசாரிகள் பேரவையின் ஒன்றிய அமைப்பாளா்கள் வெங்கடாசலம், முருகன், முத்துக்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

களக்காடு: களக்காடு ஊராட்சி ஒன்றியம், காடுவெட்டி ஊராட்சிக்குள்பட்ட கீழச்சடையமான்குளம், கீழக்காடுவெட்டி, மேலக் காடுவெட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 500 குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் இலவச அரிசியை நான்குனேரி எம்.எல்.ஏ. வெ. நாராயணன் வழங்கினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT