திருநெல்வேலி

5 ஆண்டுகளுக்குப் பின் சீரமைக்கப்பட்ட சாலை!

11th Jun 2020 09:03 AM

ADVERTISEMENT

களக்காட்டில் சேதமடைந்த புதிய பேருந்து நிலையச் சாலை 5 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் தெரிவித்தனா்.

களக்காடு புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் குடிநீா்தாங்கி குளக்கரைச் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலின்போது, சாலை சீரமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இச்சாலை சீரமைக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பின்னா் சாலை சீரமைக்கப்பட்டது குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

கோரிக்கை: களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் வளாகச் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்கவும், பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT