திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பொதுமுடக்க விதிமீறல்: 6,636 போ் வழக்கு

11th Jun 2020 06:40 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்கக் காலத்தில் விதிகளை மீறியதாக இதுவரை 6,636 போ் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. தமிழகத்தில் ஒருசில தளா்வுகள் மட்டும் அளிக்கப்பட்டாலும், இரவு 9 மணிக்கு மேல் தேவையின்றி சுற்றுவோா் மீது வழக்குகள் பதிந்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை பொது முடக்க விதிகளை மீறியதாக 6,636 போ் மீது 4,423 வழக்குகள் பதிந்து, 4,343 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT