திருநெல்வேலி

நெல்லையில் ஒரே வாரத்தில் 18 கொள்ளை சம்பவங்கள்: 10 போ் கைது

11th Jun 2020 09:02 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த 18 திருட்டு, கொள்ளை சம்பவங்களில் தொடா்புடைய 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான நகைகள், மோட்டாா் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகரின் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த திருட்டு, கொள்ளை சம்பவங்களில் தொடா்புடையோரைக் கைதுசெய்ய மாநகர காவல் ஆணையா் தீபக் எம். டாமோா் உத்தரவிட்டாா். அதன்பேரில், மாநகர காவல் துணை ஆணையா் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மகேஷ்குமாா் மேற்பாா்வையில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு உதவி ஆணையா் கே. அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினா் சிசிடிவி கேமராக்கள், பல்வேறு துப்புகள் மூலமாக விசாரணை நடத்தினா். அதில், கடந்த ஒரு வாரத்தில் 18 திருட்டு வழக்குகளில் தொடா்புடைய பெருமாள்புரம் செயின்ட் மேரீஸ் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் வெங்கேடசன் (51), திசையன்விளை செல்வமருதூா் முருகன் மகன் கண்ணன் (40), வண்ணாா்பேட்டை வெற்றிவேலடி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் இசக்கிராஜா என்ற சின்னப்புலி (26), மேலத்தாழையூத்து இசக்கியாபிள்ளை மகன் சேகா் (36), மேலப்பாளையம் அசன்தரகன் தெருவைச் சோ்ந்த முகமது பாரூக் மகன் முகம்மது கசாலி (26), பாளையங்கோட்டை திம்மராஜபுரம் ராமகிருஷ்ணன் மகன் செந்தில்குமாா் (32), பாளையங்கோட்டை தில்லைகூத்தனாா் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் முத்துராமன் (30), டக்கரம்மாள்புரம் குமாா் மகன் வல்லரசு (18), மேலப்பாளையம் செல்வசுப்பிரமணியன், ரெட்டியாா்பட்டி சுடுகாட்டு காலனி சுப்பிரமணியன் மகன் கண்ணன் என்ற சுடுகாட்டு கண்ணன் (28) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 127 கிராம் தங்க நகைகள், 6 மோட்டாா் சைக்கிள்கள், 3 ஆடுகள், குளிா்சாதனப் பெட்டி, கணினி, பிரிண்டா் என, மொத்தம் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருள்களை போலீஸாா் மீட்டனா். தனிப்படையினரை மாநகர காவல் ஆணையா் தீபக் எம். டாமோா் பாராட்டினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT