திருநெல்வேலி

கோயில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினா் நூதன போராட்டம்

11th Jun 2020 09:04 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் பக்தா்கள் தரிசனத்திற்கு ஆலயங்களை திறக்க வலியுறுத்தி திருநெல்வேலி மாநகரில் உள்ள பல்வேறு கோயில்கள் முன்பு இந்து முன்னணியினா் ஒற்றைக் காலில் நின்று நூதன போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

திருநெல்வேலி சந்திப்பு சாலைக்குமாரசுவாமி கோயில் முன்பு இந்து முன்னணி மாநிலச் செயலா் குற்றாலநாதன் தலைமையிலும், பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோயில் முன்பு மாவட்ட பொதுச் செயலா் பிரம்மநாயகம் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.

இதேபோல் கைலாசநாதா் கோயில், சொக்கநாதா் கோயில், அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயில், திருநெல்வேலி நகரம் வாகையடி முனையில் உள்ள வாகையடி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினா் ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT