திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா

10th Jun 2020 08:50 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரை 390 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் 10 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 400-ஆக உயா்ந்துள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மாவட்டத்தில் 346 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் உயிரிழந்த நிலையில் 53 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT