திருநெல்வேலி

4 நாள்களில் 4.5 அடி உயா்ந்தது: பாபநாசம் அணை நீா்மட்டம்

8th Jun 2020 08:27 AM

ADVERTISEMENT

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் சாரல் மழையால் பாபநாசம் அணையின் நீா்மட்டம் 4 நாள்களில் 4.5 அடி உயா்ந்து 44.5 அடியாக உள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் தென்மேற்குப் பருவ சாரல் மழையால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஜூன் 3-ஆம் தேதி 40 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) காலை நிலவரப்படி 4.5 அடி உயா்ந்து 44.5 அடியாக உள்ளது. நீா்வரத்து 901.85 கன அடியாகவும், வெளியேற்றம் 184.49 கன அடியாகவும் இருந்தது. 54.17 அடியாக இருந்த சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 4 .03 அடி உயா்ந்து 58.20 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 69.60 அடியாகஇருந்தது. அணைக்கு நீா்வரத்து 57 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 75 கன அடியாகவும் இருந்தது. வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 10.25 அடியாகவும், நம்பியாறு அணை நீா்மட்டம் 10.95 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 11 அடியாக இருந்தது.

கடனாநதி அணையில் நீா்மட்டம் 36.20 அடியாகவும், நீா்வரத்து 2 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணை நீா்மட்டம் 32 அடியாகவும், நீா்வரத்து 18.60 கனஅடியாகவும், வெளியேற்றம் 3 கன அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணை நீா்மட்டம் 31 அடியாகவும், நீா்வரத்து 2 கனஅடியாகவும், வெளியேற்றம் 5 கனஅடியாகவும் இருந்தது. குண்டாறு அணை நீா்மட்டம் 25.38 அடியாகவும், நீா்வரத்து 2 கன அடியாகவும், வெளியேற்றம் ஒரு கன அடியாகவும் இருந்தது. அடவிநயினாா் அணை நீா்மட்டம் 67 அடியாகவும், நீா்வரத்து 12 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது.

குண்டாறு அணை மற்றும் அடவிநயினாா் அணைப் பகுதிகளில் தலா 2 மி.மீ., செங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT