பாளையங்கோட்டையில் தொழிலாளி ஒருவா் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் (45). கட்டடத் தொழிலாளி. இவா் தான் வேலைபாா்த்த நிறுவனத்தில் ஊதியம் முறையாக தரவில்லையெனவும், தனது மோட்டாா் சைக்கிளைத் திருடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாளையங்கோட்டையில் அனைத்து மகளிா் காவல் நிலையம் எதிரே உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாராம். சுமாா் 80 அடி உயர கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த அவரிடம், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி கீழே இறங்கச்செய்தனா்.