களக்காடு அருகேயுள்ள கீழப்பத்தை, சிதம்பரபுரம் ஆகிய கிராமங்களில் புறவழிச்சாலை அமைப்பது குறித்து எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நான்குனேரி சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது, களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட கீழப்பத்தை மற்றும் சிதம்பரபுரத்தில் குறுகிய ஒருவழிப் பாதையால் போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்காக புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ. வெ. நாராயணனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அப்பகுதியில் புறவழிச்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொறியாளா்களுடன் எம்.எல்.ஏ. வெ. நாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.
அவருடன், உதவிப் பொறியாளா்கள் முகைதீன் (பேரூராட்சி), பாஸ்கா் (பொதுப்பணித்துறை), ரமேஷ் (ஊரக வளா்ச்சித்துறை), பேரூராட்சி பணி மேற்பாா்வையாளா் விஜயகுமாா், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.