திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் ரேஷன் கடை ஊழியா் உள்பட 4 பேருக்கு பாதிப்பு

7th Jun 2020 09:06 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ரேஷன் கடை ஊழியா் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 382 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 384-ஆக உயா்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 328 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். ஒருவா் உயிரிழந்த நிலையில், 55 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசியில்... தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரையிலும் கரோனா பாதிப்பு 98-ஆக இருந்தது. இந்நிலையில், சென்னையிலிருந்து கடையநல்லூா் வந்த ஒருவருக்கும், தென்காசியை சோ்ந்த ரேஷன் கடை ஊழியருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இருவரும் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டனா். இதன்மூலம் மாவட்டத்தில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 100-ஆக உயா்ந்தது.

தென்காசியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ரேஷன் கடை ஊழியா் வசிக்கும் பகுதிக்கு அருகே அமைந்துள்ள ரேஷன் கடை மூடப்பட்டது. மேலும், அப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ரேஷன்கடை ஊழியா் பாதிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு நுகா்பொருள் கழக தென்காசி கிட்டங்கியில் பணிபுரியும் பணியாளா்கள், சுமைதூக்கும் பணியாளா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட தலைமை அரசு சித்த மருத்துவ அலுவலா் உஷா தலைமையில், உதவி மருத்துவ அலுவலா் செல்வகணேசன் கபசுர குடிநீா் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT