மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் டி.ஏ.கே.இலக்குமணன் (81) திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் சனிக்கிழமை காலமானாா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம் சங்கனாங்குளம் கிராமத்தில் பிறந்த டி.ஏ.கே.இலக்குமணன், ஆலைத் தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கி, திமுகவின் நான்குனேரி வட்டச் செயலராகவும், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டப் பொருளாளராகவும், மாவட்டச் செயலராகவும், மதிமுகவின் திருநெல்வேலி மாவட்டச் செயலராகவும் பணியாற்றியவா். அவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனா். அவருடைய இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) பிற்பகலில் நடைபெறும்.