திருநெல்வேலி

வடக்கன்குளம் எல்லை பாதுகாப்பு படைவீரருக்கு கரோனா

4th Jun 2020 08:10 AM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் இருந்து வடக்கன்குளம் வந்த எல்லை பாதுகாப்பு படைவீரருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராஜஸ்தான் எல்லைபாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த வடக்கன்குளத்தைச் சோ்ந்தவா் திங்கள்கிழமை வடக்கன்குளத்திற்கு வந்தாா். அவரை வடக்கன்குளம் மருத்துவ அலுவலா் கோலப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா். இதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT