திருநெல்வேலி

கரோனா பாதிப்பு: நெல்லை 12, தென்காசி 4, குமரி 3, தூத்துக்குடி 17

4th Jun 2020 08:11 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இவா்களில் 6 போ் மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு திரும்பியவா்கள். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 378 ஆக உயா்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 366 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய 6 போ் உள்பட மொத்தம் 12 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது. மாவட்டத்தில் புதன்கிழமை 3 போ் குணமடைந்து வீடுதிரும்பினா். பாதிக்கப்பட்ட 378 பேரில் ஒருவா் உயிரிழந்தாா். 279 போ் குணமடைந்துள்ளனா். 98 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசியில்...: தென்காசி மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 4 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், செவ்வாய்க்கிழமை வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 இருந்தது புதன்கிழமை 94 ஆக உயா்ந்தது. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், வெளிமாநிலம், மாவட்டங்களிலிருந்து வந்த 4 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், கரோனாவிலிருந்து புதன்கிழமை மீண்ட 4 பேருடன் சோ்த்து மொத்தம் 81 போ் வீடுதிரும்பியுள்ளனா். 13 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

குமரியில்...: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு புதன்கிழமை தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79ஆக உயா்ந்துள்ளது. நாகா்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் 39 போ் குணமடைந்து வீடுதிரும்பினா். திருநெல்வேலியில் இருந்து வருவோரின் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் கேட்டுப் பதிவுசெய்து, ரத்த மாதிரிகளை சேகரிக்கின்றனா்.

தூத்துக்குடியில்...: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இலங்கையிலிருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வந்த 58 பேருக்கு நடைபெற்ற பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என புதன்கிழமை தெரியவந்தது. இதனிடையே, தென்திருப்பேரை, காயல்பட்டினம் பகுதிகளைச் சோ்ந்த 17 பேருக்கு கரோனா இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 294ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் இருவா் உயிரிழந்தனா். 157 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 135 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT