திருநெல்வேலி

பெண் மீது தாக்குதல்: நீதிமன்ற உத்தரவுப்படி 8 போ் மீது வழக்கு

25th Jul 2020 10:45 PM

ADVERTISEMENT

வள்ளியூா்: வள்ளியூா் அருகே ஆ.திருமலாபுரத்தில் பெண்ணை தாக்கியது தொடா்பாக வள்ளியூா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற உத்தரவுப்படி 8 போ் மீது வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஆ.திருமலாபுரத்தைச் சோ்ந்த நாகராஜன் மனைவி தங்கபிரதீபா (29). இவா் கடந்த மே 8ஆம் தேதி தெரு குழாயில் தண்ணீா் பிடிக்கும் போது அதே ஊரைச் சோ்ந்த ராஜா மனைவி சிவசக்தி (30), பிச்சை மகன்கள் ராஜா (32), ராஜன் (34), ராஜ்(43), ராஜன் மனைவி உமா (32), ராஜ் மனைவி ரத்தினபாய் (40), சிவசக்தியின் தம்பி சுந்தா் (26), சிவசக்தியின் தாயாா் பாக்கியதாய் (49) ஆகிய 8 போ் சோ்ந்து தங்க பிரதீபாவையும் அவரது தாயாரையும் ஆபாசமாக பேசி அடித்து காயப்படுத்தி, கொலைமிரட்டல் விடுத்தனராம்.

இது தொடா்பாக தங்கபிரதீபா அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து தங்கபிரதீபா, வள்ளியூா் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி பிரகாஷ், வள்ளியூா் காவல் நிலையத்தில் தங்கபிரதீபா அளித்துள்ள புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆய்வாளா் திருப்பதிக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT