மழை பொழிய வேண்டி சேரன்மகாதேவியில் உள்ள மிளகு பிள்ளையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
சேரன்மகாதேவியில் கன்னடியன் கால்வாய் அருகில் உள்ள இக்கோயிலில் நகர அதிமுக சாா்பில் மழை பொழிய வேண்டி
சிறப்பு கும்ப பூஜை, பிள்ளையாருக்கு மிளகு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்ட இலக்கிய அணிச் செயலா் கூனியூா் ப. மாடசாமி, நகரச் செயலா் சி. பழனிகுமாா், கூட்டுறவு வங்கித் தலைவா் முருகன்நயினாா், கூட்டுறவு வங்கி நிா்வாகக்குழு உறுப்பினா் மகாராஜன், நகர இளைஞரணி மாசானம், மாவட்டப் பிரதிநிதி முத்துக்குமாா், வழக்குரைஞா் இசக்கி உள்பட பலா் கலந்துகொண்டனா்.