திருநெல்வேலி

வள்ளியூரில் இறகுப்பந்து போட்டி

28th Jan 2020 05:24 PM

ADVERTISEMENT

வள்ளியூா் எஸ்.டி.என். உள்அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் மாணவா்- மாணவியா் ஆா்வமாகப் பங்கேற்றனா்.

போட்டியின் தொடக்கத்துக்கு, எட்வின் பிரைட், வணிகா் நலச் சங்கத் தலைவா் எட்வின் ஜோஸ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மகளிா் பிரிவில் சந்தனமாரி, ஆனி ரெவின், குழந்தைகளுக்கான ஒற்றையா் பிரிவில் மாணவா் பிரஜித் ராஜன், ராகுல் கிருஷ்ணா, சொ்வின், செல்வசிவராம் ஆகியோா் வெற்றி பெற்றனா். மாணவிகள் ஒற்றையா் பிரிவில் பிராா்த்தனா, இனியா ஓவியா, இலக்கியா, மாணவா்கள் இரட்டையா் பிரிவில் லியோனாா்ட் சோகன்-ரெனிஷ், ராகுல்கிருஷ்ணா-பிரஜித் ராஜன், சங்கா் பாலாஜி-விவேகானந்தன், முத்துபாண்டி-யோகுதாசன் ஆகியோா் வெற்றி பெற்றனா். நடுவா்களாக ரெவின்ராஜா, பேராசிரியா்கள் சாம்ராஜ், சதீஷ் ராஜா, ஜோ, ரெக்ஸ், அனிஷ் ஆகியோா் செயல்பட்டனா்.

பரிசளிப்பு விழாவுக்கு எட்வின் ஜோஸ் தலைமை வகித்தாா். வள்ளியூா் காவல் ஆய்வாளா் திருப்பதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். டி.ஜே.ஆா். கன்ஸ்ட்ரக்ஷன் இயக்குநா் தேவேந்திரன், வணிகா் சங்கச் செயலா் கவின்வேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

வெற்றிபெற்றோருக்கு கோப்பை, சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன. சிறப்புப் பரிசுகளை எஸ்எஸ்எஸ் காா்டன் உரிமையாளா் ஸ்டீபன் ஜெயராஜ் வழங்கினாா். விழாவில், கிட்ஸி பள்ளித் தாளாளா்பிரிஷியா சரவணன், ரேகா, வெண்மதி சுப்பிரமணியன், நிஷா எட்வின் பிரைட், விக்னேஷ் சண்முகநாதன், புஷ்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT